undefined

கத்தியை காட்டி தொடர் வழிப்பறி.. பாஜக நிர்வாகி அதிரடியாக கைது!

 

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த கண்டனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் பாதசாரிகளிடம் வாலிபர் ஒருவர் பணம் பறிப்பதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு விரைந்தனர்.

அப்போது, கத்தியை காட்டி மிரட்டிய கெட்டுவனம் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பள்ளிகொண்டா காட்டுப்புடி தெருவை சேர்ந்த கிளி (எ) சதீஷ் (37) என்பது தெரியவந்தது. இவர் வேலூர் மாவட்ட பாஜ இளஞராணி மாவட்ட தலைவர் என்பது தெரியவந்தது.

அரக்கோணம், வேலூரில் முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!