undefined

குலசை தசரா விழா... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... இதற்கெல்லாம் தடை!

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்கு பக்தர்கள் விரதம் தொடங்கி இருக்கும் நிலையில், தசரா விழாவிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. விழாவில் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எவற்றிற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிஞ்சுக்கோங்க.

குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கர்நாக மாநிலம் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்த படியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இவ்விழாவில் வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

இத்தகையை சிறப்புபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் செப்டம்பர் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது. மொத்தம் 12 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். தொழில், வேலைவாய்ப்பு, திருமண தடங்கல் நிவர்த்தி, தீராத நோய்கள், போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீங்க வேண்டி பக்தர்கள் வேடமணிந்து காணிக்கை வசூலித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இந்நிலையில் , குலசை தசரா திருவிழாவுக்கு இரும்பு ஆயுதங்கள் கொண்டு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதியை வெளிப்படுத்தும் கொடிகள், ரிப்பன்கள்,உடை அணிந்து வர கூடாது . மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தசரா திருவிழாவிற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?