undefined

ரஜினிக்கு பிடித்த கதை வரும் வரை காத்திருப்போம்...  கமல்ஹாசன் பளிச் பதில்! 

 

ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்திற்கான இயக்குநர் தேர்வு குறித்து நிலவும் குழப்பத்தின் பின்னணியில், “ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதைகள் கேட்டுக்கொண்டே இருப்போம்” என தயாரிப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவிருந்த இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 13ஆம் தேதி சுந்தர் சி இந்தத் திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, படம் தள்ளிப்போவதாகவோ, வேலை நிறுத்தப்படுவதாகவோ, அல்லது இளம் இயக்குநர்கள் ஒருவரிடம் பொறுப்பளிக்கப்படுவதாகவோ பல்வேறு செய்திகளும் ஊகங்களும் இணையத்தில் பரவின. இந்த சூழலில் தெளிவுபடுத்தும் வகையில், செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

“நான் ஒரு முதலீட்டாளன்; நான் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் என் நட்சத்திரத்திற்கு பிடித்த கதை இருக்க வேண்டும். ரஜினிகாந்துக்கு பிடிக்கும் வரையில் கதைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம். நல்ல கதையென்றால் அது யாரிடமிருந்தும் வரலாம்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “கதை நன்றாக இருக்க வேண்டும்; வாய்ப்பு நிச்சயம் உள்ளது” எனவும் பதிலளித்தார்.இதையடுத்து, லோகேஷ் கனகராஜ், நெல்சன், பிரதீப் ரங்கநாதன் போன்ற இளம் இயக்குநர்கள் இந்தப் படத்தை இயக்கக்கூடும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!