டிசம்பர் 9 , 11 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்.... இன்று முதல் நடத்தை விதிமுறைகள் அமல்!
கேரளாவில் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஷாஜஹான் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதன்படி, மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் டிசம்பர் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
இரு நாள்களிலும் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாள் நவம்பர் 21 என்றும், பரிசீலனை நவம்பர் 22 அன்று நடைபெறும். வேட்புமனு திரும்பப் பெறும் கடைசி நாள் நவம்பர் 24 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
மொத்தம் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில்,
-
கிராம பஞ்சாயத்துகளில் 17,337 வார்டுகள்,
-
தொகுதி பஞ்சாயத்துகளில் 2,267 வார்டுகள்,
-
மாவட்ட பஞ்சாயத்துகளில் 346 வார்டுகள்,
-
நகராட்சிகளில் 3,205 வார்டுகள் மற்றும்
-
மாநகராட்சிகளில் 421 வார்டுகள் என மொத்தம் ஆயிரக்கணக்கான பதவிகளுக்கான தேர்தல் ஜனநாயக திருவிழாவாக கேரளத்தில் நடைபெற உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க