undefined

நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனம்... சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கண்டுபிடிப்பு!

 

நீரிழிவு நோயாளிகளுக்கான ரத்த சர்க்கரை கண்காணிப்பு சாதன துறையில் முக்கிய முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில், குறைந்த செலவில் புதிய குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2023ல் வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் 10.1 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டிய நோயாளிகளுக்கு செலவு மற்றும் சாதனங்களின் நீடிப்பு முக்கிய சவாலாக இருந்து வருகிறது.

தற்போது பெரும்பாலானோர் சுயபரிசோதனை குளுக்கோஸ் மீட்டர் (SMBG) பயன்படுத்துகின்றனர்; அதேசமயம் அதிக துல்லியத்தைக் கருத்தில் கொண்டு சிலர் தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு (CGM) சாதனங்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை அதிக விலையுள்ளதால் பல நோயாளிகளுக்கு சுமையாக உள்ளது.

இந்த சவாலுக்கு தீர்வாக, சென்னை ஐ.ஐ.டி.யின் மின்னணு பொருட்கள் மற்றும் மெல்லிய படல ஆய்வகக் குழு, பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன் தலைமையில் குறைந்த செலவில் புதிய குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது. நீண்ட கால பயன்பாடு, துல்லியமான அளவீடு, நம்பத்தகுந்த தரவு வழங்குதல் என்பன இதன் முக்கிய அம்சங்களாகும்.

இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமையையும் சென்னை ஐ.ஐ.டி. பெற்றுள்ளதுடன், விரைவில் வர்த்தக உற்பத்தி மற்றும் மருத்துவப் பயன்பாட்டுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் மேம்பட்ட சிகிச்சை கண்காணிப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க