தறிகெட்டு ஓடிய சொகுசு பேருந்து... ஆட்டு மந்தைக்குள் பாய்ந்ததில் 146 ஆடுகள் பலியான சோகம்!
தெலங்கானா மாநிலத்தில் தறிகெட்டு ஓடுய சொகுசு பேருந்து ஆட்டு மந்தைக்குள் பாய்ந்ததில் 146 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
தெலங்கானா மாவட்டம் தன்வாடா பகுதியைச் சேர்ந்தவர் மல்லேஷ். அந்த பகுதியில் அவரும், அவரது மாமா உட்பட வேறு சிலரும் சேர்ந்து சுமார் 600க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். புதுக்கல் நெடுஞ்சாலையில் ஆடுகளை ஓட்டி சென்றுக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த ஆம்னி சொகுசுப் பேருந்து ஒன்று தறிகெட்டு ஓடிய நிலையில் திடீரென ஆட்டு மந்தைக்குள் பாய்ந்தது.
இதில் சாலையில் 100 மீட்டர் தூரத்துக்கும் மேலாக ஆடுகளை சொகுசுப் பேருந்து இழுத்து சென்றதில் சுமார் 146 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. சாலை முழுவதும் செந்நிறமாக ரத்த களறியாக மாறியது. பொதுமக்கள் திரண்டு வந்த நிலையில் பேருந்தின் ஓட்டுநர் அங்கிருந்து பயந்து ஓட்டமெடுத்து தப்பித்தார். சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகள் உயிரிழந்ததாக ஆட்டு உரிமையாளர்கள் கதறினர்.
இதையடுத்து உரிமையாளர்கள் நஷ்ட ஈடு வழங்கக் கோரி அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!