பராமரிப்பு பணிகள் நிறைவு... இன்று முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும்!
சென்னை எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் 2024 முதல் நடைபெற்று வருகின்றன. இதனால், மொத்தம் உள்ள 11 நடைமேடைகளில் 4 ல் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக ரயில்கள் அனுமதிக்கப்படவில்லை. எழும்பூரில் இருந்து புறப்பட்ட சில ரயில்கள், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது மேம்பாட்டுப் பணிகள் குறிப்பிட்ட அளவுக்கு நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து சென்னை எழும்பூா் - மதுரை தேஜஸ் ரயில் (எண் 22671), சென்னை எழும்பூா் - புதுச்சேரி மெமு விரைவு ரயில் (எண் 66051) ஆகிய ரயில்கள் செவ்வாய்க்கிழமை இன்று ஆகஸ்ட் 5ம் தேதி முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.
இதேபோல, மறுமாா்க்கத்தில் மதுரை - சென்னை எழும்பூா் தேஜஸ் ரயில் (எண் 22672), புதுச்சேரி - சென்னை எழும்பூா் மெமு விரைவு ரயில் (எண் 66052) ஆகிய ரயில்கள் எழும்பூா் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!