undefined

டெல்லி முதல்வரை  கன்னத்தில் அறைந்த குற்றவாளி கைது... போலீசார் தீவிர விசாரணை!

 

டெல்லி முதல்வர்  ரேகா குப்தா  பொதுமக்கள் மனுக் கேட்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் குஜராத்தில் வசித்து வரும்  ராஜேஷ் கிம்ஜி  கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தத் தாக்குதலில், ராஜேஷ் முதலமைச்சரை பலமுறை கன்னத்தில் அறைந்து, முடியைப் பிடித்து இழுத்து, தள்ளி, காயப்படுத்த முயற்சித்ததாக  தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 80 வினாடிகள் வரை இந்தத் தாக்குதல் நீடித்தது.

ராஜேஷ் கிம்ஜி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வசித்து வரும் இவர்  கடந்த 24 மணி நேரமாக முதலமைச்சரின் இயக்கங்களை உளவு பார்த்ததாகவும், அவரது ஷாலிமார் வீடு வரை சென்று ஆய்வு செய்ததாகவும் அமைச்சர் பிரவேஷ் வர்மா கூறியுள்ளார்.  சிவில் லைன்ஸ் பகுதியில் இரவைக் கழித்த ராஜேஷ், முதலமைச்சரைச் சந்தித்தவுடன் தாக்குதலைத் தொடங்கியுள்ளார். 

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சதியா? அல்லது தனிப்பட்ட காரணமா? என்பது குறித்து டெல்லி மற்றும் குஜராத் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ராஜேஷ் விலங்கு பிரியர். அவர்  நாய்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு  காரணமாக ஆத்திரமடைந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் முதலமைச்சர் ரேகா குப்தாவின் மனோதிடம் குறையவில்லை எனவும்  தனது மக்கள் பணியைத் தொடருவார் எனவும் அமைச்சர் பிரவேஷ் வர்மா உறுதியளித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?