undefined

காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை!

 

தூத்துக்குடியில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி கால்டுவேல் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் கன்னிராஜா மகன் சரவணகுமார் (25). இவர் கோவில்பட்டி நீச்சல் குளத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த ரோசி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 

ரோசிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சரவணகுமார் ரோசியுடன் கால்டுவேல் காலனி 3 வது தெருவில் வசித்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை காரணமாக ரோசி சரவணகுமாரை விட்டு பிரிந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுவிட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்த சரவணகுமார் கடந்த 10ம் தேதி இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில், நேற்று மதியம் அவரது தங்கை தங்க புஷ்பம் என்பவர் அவரது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதையடுத்து அவர் தனது தாயார் மற்றும் உறவினர்களுடன் கதவை உடைத்து உள்ளே வந்து பார்த்துபோது சரவணகுமார் வீட்டின் பெட்ரூமில் உள்ள சீலிங் பேனில் கழுத்தில் சேலையால் தூக்கு மாட்டி தொங்கியது தெரியவந்தது. 

இதுகுறித்து தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரை மீட்டு போலீசார் உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கிருந்த மருத்துவர் சரவண குமார் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?