undefined

பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர் வெட்டிக்கொலை!

 

திண்டுக்கல் மாவட்டத்தில், பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்ட பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(25). தற்போது மதுரை திருமங்கலத்தில் தனியார் மில் ஒன்றில் தங்கியிருந்தப்படியே பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி விடுமுறையில் மதுரையில் இருந்து திண்டுக்கல் வந்திருந்த கிருஷ்ணன், நேற்று முன்தினம், அய்யங்கோட்டைக்கு வந்த தனபாண்டி என்பவர் பெண்களை கேலி செய்ததாக தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்று தனபாண்டியனை தட்டிக் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு கிருஷ்ணன் ஊருக்கு திரும்பி சென்று விட்டார்.

இந்நிலையில், கிருஷ்ணன் மீது ஆத்திரத்தில் இருந்த தனபாண்டி நேற்று முன்தினம் இரவு தனது தம்பி நாகபாண்டி (23), நண்பர் சந்தீப் சஞ்சய் மற்றும் உறவினர்கள் சிலருடன் அய்யங்கோட்டைக்கு திரும்பச் சென்று, அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணனை எழுப்பினர்.

பின்னர் அங்குள்ள கோவில் பகுதிக்கு கிருஷ்ணனை அழைத்து சென்று, கிருஷ்ணனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தனபாண்டி, நாகபாண்டி, சந்தீப் சஞ்சய் ஆகியோர் கிருஷ்ணனை தாக்கியுள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கிருஷ்ணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

அதன் பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். கிருஷ்ணனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று பார்த்த நிலையில், கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து, தனபாண்டி, நாகபாண்டி, சந்தீப் சஞ்சய் ஆகிய 3 பேரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?