மசூதியில் தொழுகையின் போது இட தகராறு: இளைஞரை கம்பத்தில் கட்டி தீ வைத்த கொடூரம்!
உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூனில் மசூதியில் தொழுகையின் போது இடம் குறித்து ஏற்பட்ட தகராறு கொடூர சம்பவமாக மாறி, ஒரு இளைஞர் கம்பத்தில் கட்டப்பட்டு தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 20 வயது மெஹபூப் எனும் இளைஞர் உயிருடன் மீண்டிருக்கிறார். தற்போது அலீகார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சஹஸ்வான் சாலைக்கு அருகில் உள்ள மசூதியில் வியாழக்கிழமை தொழுகை இடத்தைப் பற்றி மெஹபூப் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மூவர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மசூதியில் இருந்தோர் சமரசம் செய்ததால் விவகாரம் தற்காலிகமாக முடிந்தது.
ஆனால் நேற்று வெள்ளிக்கிழமை காலை மெஹபூப் மீண்டும் தொழுகைக்காக மசூதிக்கு வந்தபோது தகராறு மீண்டும் வெடித்தது. தொழுகையை முடித்து வெளியே வந்த அவரை மூவர் திடீரென பிடித்து கம்பத்தில் கயிறு கொண்டு கட்டி, பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது. கயிறு எரிந்ததால் மெஹபூப் தன்னை விடுவித்து, தீக்காயங்களுடன் வீடு திரும்பியுள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை ருடாயன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அலீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது நிலைமை சீரானது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்த தகவல் மாநில அவசர உதவி எண் UP-112 மூலம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. சம்பவத்துக்கு பிறகு விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அருகிலுள்ள பெட்ரோல் பங்க் சிசிடிவியில் மெஹபூப் தானே பெட்ரோல் வாங்கும் காட்சிகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கிராமப்புற போலீஸ் கண்காணிப்பாளர் ஹர்தேஷ் கதேரியா தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க