undefined

நடைபயிற்சியில் சோகம்...  பிரபல மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி! 

 
 

114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங் . இவர் பஞ்சாபை சேர்ந்தவர். இவர் ஜலந்தர்-பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியாஸ் கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  படுகாயம் அடைந்தார். 

 


அக்கம் பக்கத்தினர், படுகாயங்களுடன் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள்   தெரிவித்தனர். 'தலைப்பாகை சூறாவளி' என அழைக்கப்படும் பவுஜா சிங் மறைவு பல்வேறு தரப்பினரை சோகத்தில் ஆழ்த்தியது.


பவுஜா சிங் முழு சீக்கிய சமூகத்திற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருந்தார் என சீக்கிய மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இவர் தனது 89 வயதில் சாலை விபத்தில் மனைவியையும், மகனையும் இழந்த பிறகு அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்காக மாரத்தான் ஓட தொடங்கி மக்களிடையே நம்பிக்கையையும், தைரியத்தையும் சேர்த்த  அடையாளமாக மாறினார் பவுஜா சிங்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?