பணத்தை டபுளாக்கி தருவதாக மெகா மோசடி.. ரூ.70 லட்சத்தை சுருட்டிய பள்ளி ஆசிரியர் கைது!
திருவண்ணாமலை மாவட்டம் சு.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். மனைவி உண்ணாமலை. இவர் இசுக்காழி காட்டேரி அரசு பள்ளியில் நடுநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஏல சீட்டை நடத்தி வந்தனர். கடந்த 2013ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் உண்ணாமலையிடம் ரூ.1 லட்சத்துக்கு ஏலத்தில் கலந்து கொண்டு கடந்த ஜனவரி மாதம் வரை 13 தவணையாக ரூ.46 ஆயிரத்து 125 செலுத்தினார். அதேபோல் மணிவண்ணன் தனது மகன் பெயரில் உள்ள ரூ.1 லட்சம் ஏலச்சீட்டை 13 தவணைகளில் ரூ.46 ஆயிரத்து 125 செலுத்தியுள்ளார்.
மேலும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஏலச்சீட்டில் தலா 6 தவணை செலுத்தியுள்ளார். ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் 750 ரூபாவை மணிவண்ணன் ஊண்ணாமலையிடம் ரொக்கமாக செலுத்தினார். அதன் பிறகு உண்ணாமலையும், அவரது கணவர் செல்வமும் பல தொழில்கள் செய்து வருவதால் எங்களுக்கு அதிக பணம் தேவைப்படுவதால் மணிவண்ணனை தொடர்பு கொண்டனர். எனவே உடனடியாக ரூ.8 லட்சம் கொடுத்தால் இரட்டிப்பாக தருவதாக கூறியுள்ளனர். மணிவண்ணன் 20123 ஜூன் மாதம் உண்ணாமலை மீதுள்ள நம்பிக்கையால் 5 லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்துள்ளார்.
அதன்பிறகு, செல்வத்தின் வங்கி கணக்கில் 2 லட்சத்து 60 ஆயிரம் போட்டுள்ளார். மணிவண்ணன் அவர்களுக்கு மொத்தம் ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம். அதன்பின், திடீரென ஏலசீட்டை நிறுத்திவிட்டு உண்ணாமலை தலைமறைவானார். இதையடுத்து மணிவண்ணன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதேபோல், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகப்பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உண்ணாமலை மற்றும் அவரது கணவர் செல்வம் ஆகியோர் அதே ஊரைச் சேர்ந்த 20 பேரிடம் பணத்தை இரட்டிப்பதாகக் கூறி மொத்தம் ரூ. 70 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் ஆசிரியை உண்ணாமலையை கைது செய்த நிலையில், அவரது கணவர் செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!