உருகும்   பனிப்பாறைகள்...  2 மடங்காக விரிவடையும் ஏரிகள்..  அதிர்ச்சி தகவல்!

 

இஸ்ரோ வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் தரவுகளின் படி, அதிகரித்து வரும் வெப்பநிலையால் இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் பரப்பளவு இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பனிப்பாறை ஏரி உடைப்பால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இஸ்ரோ எச்சரித்துள்ளது.

இமயமலையில் ஏற்படும் மாற்றங்கள் உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தும் அளவுக்கு குறிப்பிடத்தக்கவை. இஸ்ரோ வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படம், இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

குறிப்பாக, 1984 முதல் 2023 வரை இஸ்ரோ ஏவப்பட்ட பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களின் வரைபடத் தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இமயமலையில் உள்ள 601 ஏரிகள் இரண்டு மடங்குக்கும் அதிகமாகவும், 10 ஏரிகள் 1.5 முதல் 2 மடங்கு வரையிலும் விரிவடைந்துள்ளதாக இஸ்ரோ ஆய்வில் தெரியவந்துள்ளது. 65 ஏரிகள் 1.5 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

2016-17ல் அடையாளம் காணப்பட்ட 10 ஹெக்டேருக்கும் அதிகமான 2,431 ஏரிகளில், 676 பனிப்பாறை ஏரிகள் 1984 முதல் கணிசமாக விரிவடைந்துள்ளன என்று இஸ்ரோ அறிக்கை கூறுகிறது. இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளின் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் பரப்பளவும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த பனிப்பாறைகள் இமயமலைப் பகுதியில் உள்ள நதிகளின் ஆதாரமாக முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்த பனிப்பாறைகள் தொடர்ந்து உருகுவதால் "பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம்" (GLOFs) ஏற்பட வாய்ப்புள்ளது என்று இஸ்ரோ அறிக்கை தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் சாதாரண வெள்ளத்தை விட பல மடங்கு சீற்றத்துடன் வருவதால் பெரும் ஆபத்து என்று கூறப்படுகிறது. பனிப்பாறை வெடிப்பு வெள்ளத்தால் ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!