145 கோடி இந்தியர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகை மோடியின் பிறந்த நாள்... முகேஷ் அம்பானி வாழ்த்து!
இன்று செப்டம்பர் 17ம் தேதி புதன்கிழமை பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் , தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து வெளியிட்ட வாழ்த்துப் பதிவில் இந்தியாவின் 100-வது சுதந்திர தினத்திலும் பிரதமர் மோடி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது ஆசை என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாள் இன்று 145 கோடி இந்தியர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகை என்று முகேஷ் அம்பானி தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமம் மற்றும் அம்பானி குடும்பத்தின் சார்பாக வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறிய அவர், இந்தியாவின் 'அமிர்த காலத்தில்' மோடியின் பிறந்தநாள் வருவது தற்செயல் நிகழ்வு அல்ல எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவை உலக அளவில் ஒரு புதிய வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு மோடியின் தலைமை மிகவும் அவசியம் எனவும் இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போதும், அவர் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் முகேஷ் அம்பானி தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். பில் கேட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான் உட்பட பல சினிமா பிரபலங்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!