undefined

கொசுவர்த்தியால் தீ விபத்து... மனைவி பலி; கணவர் படுகாயம்!

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, கொசுத் தொல்லை அதிகம் இருந்ததால், இரவில் கொசுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு தூங்கியதில், கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவரும் தீக்காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறையடுத்த வில்லிசேரியில் உள்ள குமரன் தெருவைச் சேர்ந்த அய்யனார் மகன் செல்வராஜ் (54). விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள், மகள் கௌசல்யா. இவர்கள் கடந்த ஜூன் 13ம் தேதி கொசுவர்த்தியைப் பற்ற வைத்து விட்டு, வீட்டுக் கதவைத் திறந்து வைத்து தூங்கி உள்ளனர். 

அப்போது, காற்று காரணமாக, கொசுவர்த்தியின் தீப்பொறி அருகேயுள்ள சாக்கில் விழுந்து தீப்பற்றி, மாரியம்மாளின் சேலையிலும் தீப்பிடித்துள்ளது. இதில், அவரும், காப்பாற்ற முயன்ற செல்வராஜூம் காயமடைந்தனர். அவர்களை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

பின்னர், மாரியம்மாள் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?