செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் தாயும் மகனும் தற்கொலை!

 

செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்ட பின், தாயும் மகனும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அரக்கோணத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமாள் ராஜபேட்டையில் வசித்து வருபவர் 52 வயது மதன சேகர். இவர்   ரயில்வே வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஹேமலதா, சென்னை புழல் சிறையில் வார்டனாக உள்ளார். இவர்களுக்கு, ஒரு மகன் உள்ளார். ஹேமலதா கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். 


இந்நிலையில் வங்கியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக   மதனசேகர் சரிவர வேலைக்கு செல்வதில்லை. இதனால் மதனசேகரும், புண்ணியவதியும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நேற்று காலை மதனசேகர், புண்ணியவதி இருவரும் ஒரே அறையில் தனித்தனியாக தூக்கில் சடலங்களாக தொங்கி கொண்டிருந்தனர்.  


இது குறித்து  மதன சேகர் நேற்று முன்தினம் இரவு டைரியில், ‘தொழிலாளர்கள் நலன் காக்க மதன சேகர் மற்றும் அம்மா புண்ணியவதி வீரமரணம்’ என எழுதி இப்படிக்கு மதனசேகர் என கையெழுத்திட்டுள்ளார். அதனை செல்போனில் படம் பிடித்து சக தொழிலாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். அத்துடன்  தாயுடன் இறுதியாக எடுத்த செல்பி படத்தையும் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?