undefined

முதல் படத்திலேயே தேசிய விருது... ‘கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி கடந்து வந்த பாதை... பிரமிக்க வைக்கும் திரையுலக பயணம்!

 

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று ரசிகர்களால் அன்புடன் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் சரோஜா தேவியின் திரையுல வாழ்க்கை பிரமிக்க வைக்கிறது. தனது 50க்கும் மேற்பட்ட திரையுலக வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் சரோஜா தேவி நடித்துள்ளார். அத்தனையும் ஒவ்வொரு ரகம். தனது கொஞ்சும் தமிழால் கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வந்தனர். 

1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் சரோஜா தேவி பிறந்தார். இவரது தந்தை பைரப்பா. தாய் ருத்ரம்மா. காவல் அதிகாரியான இவரது தந்தை இவருக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி  என்று மூன்று அக்காக்கள் இருந்த நிலையில், ராதாதேவி என்று பெயர் சூட்டினார். இவருக்கு வசந்தாதேவி என்ற ஒரு தங்கையும் உள்ளார்.

நான்காவது மகளான சரோஜா தேவியை சிறுவயதிலேயே நடனம் கற்றுக்கொள்ள பெற்றோர் உற்சாகப்படுத்தினர். சரோஜா தேவிக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தையும் அவரது தந்தை ஊக்குவித்தார்.

1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஸ்ரீ ஹர்ஷாவுடன் சரோஜா தேவியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இந்திரா, கவுதம் ராமசந்திரன் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழ் திரையுலகில் உலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜாதேவி, அனைவரிடமும் நட்புடன் பழகி வந்தார். ஒரே நேரத்தில் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்..

1955ம் ஆண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சரோஜா தேவிக்கு, அறிமுகமான முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது. முதல் படத்திலேயே சரோஜாதேவிக்கு சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதும் கிடைத்தது.

இதையடுத்து திரை உலகிற்காக ராதா தேவி என்ற தன் பெயரை சரோஜா தேவி என்று மாற்றி கொண்டார். தமிழில் 1958 ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். 1960-70 ஆம் ஆண்டுகளில் திரையுலகில் கோலோச்சி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் சரோஜா தேவி நடித்துள்ளார். கடைசியாக நடிகர் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார்.

கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழித் திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவருக்கு, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. பல மாநில அரசுகளின் விருதுகளையும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?