சபரிமலையில் நவக்கிரக கோவில் பிரதிஷ்டை... சிறப்பு பூஜைகள்! 

 
 


சபரிமலை ஐயப்பன் கோவிலில்  இடது புறம் உள்ள நவகிரக மண்டபத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டு இருந்தது. 

தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன் அடிப்படையில் மாளிகைபுரத்தம்மன் கோவில் அருகில் புதிய நவக்கிரக கோவில் கட்டப்பட்டு, பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.  நவக்கிரக கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜை செய்தார். நேற்று ஜூலை 12ம் தேதி சனிக்கிழமை சுத்தி கலச பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. 

இன்று காலை 11 மணிக்கு  வேதமந்திரங்கள் முழங்க நவக்கிரக மண்டபம் பிரதிஷ்டை நடைபெற்றது. பிரதிஷ்டை சடங்குகள் மற்றும் பூஜைகளை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னின்று நடத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு வழக்கமான பூஜைகள் நிறைவடைந்ததும்   பின் நடை அடைக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது..

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?