2026 க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்... அமித்ஷா உறுதி!
Jan 6, 2025, 19:38 IST
சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் தியாகங்களை மறக்க முடியாது. 2026 மார்ச்சுக்குள் இந்தியாவில் இருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கட்கிழமை உறுதியளித்துள்ளார். பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் ஐஇடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதில் “பிஜாப்பூரில் (சத்தீஸ்கரில்) IED குண்டுவெடிப்பில் DRG வீரர்கள் உயிரிழந்த செய்தியால் மிகவும் வருத்தம் அடைந்தேன். துணிச்சலான வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது, மார்ச் 2026க்குள் இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிப்போம்” என பதிவிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய மிகக் கொடிய தாக்குதல் இதுவாக பார்க்கப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!