பிரியாணி பிரியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!
உணவுப்பிரியர்கள் பலருக்கும் பிடித்த பொதுவான உணவு வகைகளில் ஒன்று பிரியாணி தான். சிக்கன், மட்டன், மீன் , வெஜ், பன்னீர், மஷ்ரூம் என பலப்பல பிரியாணி வகைகள் இருந்தபோதிலும் பக்கெட் பிரியாணிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான். பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி சுடச்சுட பிரியாணியை பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் அடைத்து வைத்து வாங்கி வந்து உண்பது உடலுக்கு சீர்கேட்டை விளைவித்துவிடும். மிகவும் ஆபத்தானது என மருத்துவ வல்லுனர் குழு தெரிவித்துள்ளது. இதன்படி பிரியாணி சுடச்சுட இருப்பதால் பிரியாணி வழங்கப்படும் பட்கெட்டுகளில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் உருகி உணவில் கலந்து விடும். அதனை உண்பது விஷத்தை அள்ளி அள்ளி பிரியமாக சாப்பிடுவதற்கு சமம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிளாஸ்டிக்கில் உள்ள டாக்ஸின் என்ற ரசாயனம் உணவில் கலப்பதால் வயிற்று உபாதை, வாந்தி, மயக்கம், தலைவலி, பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!