ரிதன்யாவைத் தொடர்ந்து திருப்பூரில் அடுத்த அதிர்ச்சி... வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!
திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் சுவடே இன்னும் கலையாத நிலையில், திருப்பூரில் அடுத்த அதிர்ச்சியாக வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இளம்பெண் ரிதன்யா தற்கொலைக்கு முன்பாக, தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோக்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும், ஈரோடு மாவட்டைச் சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 15ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 120 சவரன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை பிரீத்தியின் சார்பில் வரதட்சணையாக கணவர் வீட்டாருக்கு தரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பிரீத்தியின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் அவரை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்து வந்த பிரீத்தி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பிரீத்தியின் கணவர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பிரீத்தியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!