நிமிஷா பிரியா வழக்கு ... தண்டணை வேணும்... உயிரிழந்தவரின் சகோதரர் பேச்சு!
இந்நிலையில் உயிரிழந்த மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி, “கொலையை நியாப்படுத்த முடியாது கண்டிப்பாக அவருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்” என ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சற்று வேதனையுடன் பேசியுள்ளார். இது குறித்து “எங்களின் நிலைப்பாடு, இஸ்லாமிய சட்டப்படி தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே. வேறு எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.”
நிமிஷாவுக்கு இஸ்லாமிய சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்கு குறைவாக எதையும் ஏற்கப்பட மாட்டோம். இந்த கொடூர குற்றத்தால் எங்கள் குடும்பம் நீண்ட காலமாக வேதனை அனுபவித்து வருகிறது. நிமிஷாவின் பாஸ்போர்ட்டை தலால் பறித்ததாகவோ, அவர் மீது வைக்கப்பட்ட பிற குற்றச்சாட்டுகளுக்கோ எந்த ஆதாரமும் இல்லை. அப்படியாக பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தியாக பரவும் செய்தி தான்” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து இந்திய ஊடகங்கள் நிமிஷாவை பாதிக்கப்பட்டவராக சித்தரித்து, பொதுமக்கள் மனதை திசை திருப்புவதாகவும் குற்றம் சாட்டினார். “உண்மையை திரித்து, நிமிஷாவை இந்திய ஊடகங்கள் பாதிக்கப்பட்டவராக காட்டுவது வேதனை அளிக்கிறது. எந்தவொரு குற்றத்தையும், அதன் காரணம் எதுவாக இருந்தாலும், கொலைக்கு நியாயமாக ஏற்க முடியாது,” எனவும் அப்தெல் ஃபத்தா மஹ்தி கூறினார்.
இந்த வழக்கில் 10 வது மற்றும் தற்போதைய கிராண்ட் முஃப்தி ஷேக் அபூபக்ர், ஏமனில் உள்ள முக்கிய இஸ்லாமிய அறிஞர்களைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி இஸ்லாம் மனிதநேயத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்” என கேட்டுக்கொண்ட காரணத்தால் தான் நிமிஷா பிரியாவுக்கு ஆறுதலாக, ஜூலை 16, 2025 அன்று நடைபெறவிருந்த அவரது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது, மஹ்தியின் குடும்பம் ‘தயா’ எனப்படும் இழப்பீட்டுத் தொகையை ஏற்று, மன்னிப்பு வழங்க ஒப்புக்கொள்ளுமா என்பதைப் பொறுத்தே நிமிஷாவின் எதிர்காலம் அமைந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!