நிஃபா வைரஸ் பாதிக்கப்பட்ட இளைஞர் தப்பி ஓட முயற்சி... சுற்றி வளைத்த போலீசார்!
கேரள மாநிலத்தில் மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் வேகமெடுத்து பரவி வருகிறது. அதன்படி பாலக்காடு, மலபுரத்தில் 3 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களிடம் தொடர்பில் இருந்த 675 வேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் பாலக்காடு பகுதியில் வசிக்கும் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமை இந்த தொற்றால் 57 வயதான நபர் உயிரிழந்த நிலையில், அவரது மகனுக்கு இந்த தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. அவருடன் 46 பேர் தொடர்பில் இருந்ததாகத் தெரிகிறது. தற்போது தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மன்னார்காடு பகுதியில் வசிக்கும் பாரூக் என்பவர் தப்பி வெளியேற முயற்சி செய்துள்ளார். அவர் பைக்கில் தப்ப முயன்ற போது காவல்துறையினர் அவரை சுற்றி வளர்த்தனர். எனினும் அவர்களிடம் பாரூக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பின்னர் மோதலாக மாறியது இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!