காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் நிவேதா பெத்துராஜ்!
தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
‘ஒரு நாள் கூத்து', ‘பொதுவாக என் மனசு தங்கம், ‘டிக் டிக் டிக்', ‘திமிரு புடிச்சவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் கார் பந்தய வீராங்கனையுமாகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் தனது காதலரை அறிமுகப்படுத்தி உ ள்ளார் நிவேதா பெத்துராஜ். நிவேதா பெத்துராஜ் காதலரின் பெயர் ரஜித் இப்ரான்.
மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் தொழிலதிபரும் கூட. விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நிவேதா பெத்துராஜ் - ரஜித் இப்ரான் ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!