நாளை விடுமுறை கிடையாது.. தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவு!!

 

நாளை அக்டோபர் 24ம் தேதி விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தனியார் பள்ளிகளை பொறுத்தவரை விஜயதசமிக்கு மாணவர்சேர்க்கை நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  கடந்த சில ஆண்டுகளாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது  அதன்படி நாளைய தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என அரசு பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக  அன்றைய தினம்  கல்வி கலைகளை கற்கத் தொடங்குகின்றனர். விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் ப்ரீகேஜி, எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம்.


இந்நிலையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை வேலை நாள் என்பதால் ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் எனவும் எல்கேஜி , யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட   வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!