திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் இரவு தங்கத் தடை இல்லை: காவல்துறை விளக்கம்!

 

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக குடமுழுக்கு விழா நடந்த பின் வார இறுதிகள் மற்றும் அதிகாலை விஸ்வரூப தரிசன நேரங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. பல பக்தர்கள் இரவு நேரங்களில் கடற்கரையில் தங்கி மறுநாள் அதிகாலையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதும் வழக்கம்.

சமீபத்தில் கோயில் வளாக மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே தங்க வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியது. இதன் பேரில் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் வெள்ளி இரவு கடற்கரையில் தங்கியிருந்த பக்தர்களை அனுப்பி, கோயில் வளாகத்தில் தங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்த நடவடிக்கையால் கடற்கரையில் தங்க தடை விதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், காவல்துறை அதிகாரிகள் விளக்கம் வழங்கினர். அதன்படி, பருவமழை, கடல்சுழற்சி எச்சரிக்கை, திடீர் கனமழை போன்ற பாதுகாப்பு சிக்கல்கள் இருந்தால் மட்டுமே கடற்கரையில் தங்க தடைக்கப்படும்.

இயல்பான காலங்களில் பக்தர்கள் இரவு நேரங்களில் கடற்கரையில் தங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், பாதுகாப்பு நிமித்தம் தேவையான சமயங்களில் மட்டும் கோயில் வளாகத்தில் தங்குமாறு அறிவுறுத்தப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

திருக்கோயில் தரிசனத்திற்காக வருவோர் தங்களது பாதுகாப்பை கருத்தில் வைத்து அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!