செல்போன் வாங்கி கொடுக்காததால் விபரீதம்.. மகன் தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில் தந்தையும் தற்கொலை!
மகாராஷ்டிராவின் நாந்தேட்டில் கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்களில் இளையவர் தான் ஓம்கர். 16 வயதான ஓம்கர் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மகர சங்கராந்தி பண்டிகையின் போது பள்ளி விடுதியில் இருந்து வீடு திரும்பியிருந்தார். அப்போதுதான் எதிர்பாராத மற்றும் கொடூரமான சம்பவம் நடந்தது. சம்பவத்தின்படி, வியாழக்கிழமை, பிலோலி தாலுகாவின் மினாகியில் உள்ள தங்கள் பண்ணையில் உள்ள ஒரு மரத்தில் ஓம்காரும் அவரது தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி பல அதிர்ச்சியூட்டும் விவரங்களைக் கண்டறிந்தனர். காவல்துறையினர் வழங்கிய தகவலின்படி, ஓம்கர் தனது தந்தையிடம் கல்வி நோக்கங்களுக்காக தொடர்ந்து செல்போன் கேட்டு வந்தார். ஆனால் அவரது தந்தையால் அதை வாங்கி தர முடியவில்லை.
ஓம்கரின் குடும்பத்தினர் அளித்த அறிக்கையில், "புதன்கிழமை மாலை, ஓம்கர் தனது தந்தையிடம் தொடர்ந்து செல்போன் கேட்டார். பண்ணை மற்றும் வாகனத்திற்காக வாங்கிய கடன்கள் காரணமாக அவரது தந்தை கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாகத் தெரிகிறது, எனவே அவருக்கு ஸ்மார்ட்போன் வாங்க முடியவில்லை."
இதனால், மனமுடைந்த ஓம்கார் வீட்டை விட்டு வெளியேறி பண்ணை வீட்டிற்குச் சென்றார். மறுநாள் காலையில் அவர் வீடு திரும்பாதபோது, அவரைத் தேடிச் சென்ற அவரது குடும்பத்தினர், பண்ணை வீட்டில் உள்ள ஒரு மரத்தில் ஓம்கார் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓம்காரின் தந்தை, தனது மகன் இறந்த விரகதியில் அதே கயிற்றைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டார். மகன் மற்றும் தந்தை இருவரின் அடுத்தடுத்த மரணங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!