இனி தினமும் 10 மணி நேரம் வேலை... தனியார் நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி!
மகாராஷ்டிர மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு பணியாளர்களின் வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த அந்த மாநில அரசு திட்டமிட்டு பரிசீலித்து வருகிறது. ஒரு வாரத்திற்கு 48 மணி நேர வேலை என்ற நடைமுறை தான் தற்போது பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் இருந்து வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2017-ல் திருத்தம் மேற்கொள்ள அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அங்குள்ள கடைகள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தற்போதுள்ள 9 மணி வேலை நேரத்தை 10 மணி நேரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்களில் 10 மணி நேரத்திற்கு மேலாக கண்டிப்பாக வேலை வாங்கக்கூடாது எனவும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக 12 மணி நேர வேலை என்பது முற்றிலும் நீக்கப்படுகிறது. அதேபோல வேலை நேரம் தவிர கூடுதல் வேலை நேரத்தின் அளவு 3 மாதங்களுக்கு 125 மணி நேரத்தில் இருந்து 144 மணி நேரமாக மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கூடுதலாக 10.30 மணி நேரம் வேலை செய்து கொள்ளலாம். இந்த மாற்றங்கள் குறித்து மகாராஷ்டிர மாநில அரசு பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக தெலங்கானாவில் ஒரு நாள் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டது. கர்நாடகத்திலும் 10 - 12 மணி வேலை நேரமாக மாற்ற மாநில அரசு முயற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தினசரி வேலை நேரம் அதிகரிக்கப்படுவது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!