undefined

இனி செய்திகளை படிக்க ட்விட்டரில்  கட்டணம்! எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி!

 

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்குறைப்பு, நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள், கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே   ப்ளூ டிக் என அதகளப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது  ட்விட்டரில் செய்திகளை படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார். ப்ளூ டிக் நடைமுறை போல் இதற்கும்  மாதாந்திர சந்தா திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  சந்தா செலுத்தாதவர்கள் தான் விரும்பும் ப்ரீமியம் செய்திக்கு அதற்குரிய கட்டணம் செலுத்தி படிக்கலாம். ஆனால், மாதாந்திர சந்தாவில் பதிவு செய்யாவிட்டால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

"உலகெங்கிலும் அருகிலும் தொலைதூரங்களிலும் உள்ள படைப்பாளர்களுக்கு ஆதரவு வழங்குங்கள்! பலருக்கு இது ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. இது இன்னும் அதிக அளவில் சிறந்த படைப்புகளை வழங்க உதவியாக இருக்கும்" எனவும் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் மாதாந்திர சந்தா செலுத்தி ப்ளூ டிக் பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது ட்விட்டரில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!