undefined

பதைபதைக்கும் வீடியோ!! ஒடிசா ரயில் விபத்து! நெஞ்சை உறைய வைக்கும் திகில் நிமிடங்கள்!! 

 


ஒடிசா மாநிலத்தில் கடந்த வாரம்  2 எக்ஸ்பிரஸ் ரயிலும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட கோரவிபத்தில் 275க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ந்துள்ளனர்.  ல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில், எஸ்எம்விடி    ரயில்கள் இந்த விபத்தில் சின்னாபின்னமாகின.   உலகையே உலுக்கிபோட்ட இந்த கோர விபத்து நடைபெற்ற கடைசி நிமிட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நெஞ்சைபதற வைக்கும் இந்த வீடியோ   சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

<a href=https://youtube.com/embed/sz1S9u5FVMk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/sz1S9u5FVMk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Viral | Video of moments before Coromandel Express’ crash surfaces" width="670"> இந்த வீடியோவில்   தூய்மைப் பணியாளர் ஒருவர் ரயிலில் உள்ள பெட்டிகளை தூய்மை செய்துவருகிறார்.  சிலர் சீட்டில்   தூங்குகின்றனர். சிலர் ஸ்மார்ட்போன் பயன்படுத்திக் கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நொடிப் பொழுதில் விபத்து நடந்து வீடியோ வெளியாகியுள்ளது.ஒடிசா ரயில் விபத்து சிபிஐ உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உட்பட   பலர் ஆய்வு நடத்தினர்.

சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பாலசோரில் விபத்து நடந்த பகுதியில் நடந்து வரும் மீட்பு பணிகளை 2வது நாளாக மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.  எதிர்க்கட்சிகள் அவரை விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தி வருகின்றன. இதற்கு பதில் அளித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் " ரயில் விபத்தை அரசியல் ஆக்க வேண்டாம். ராஜினாமா செய்வதை காட்டிலும் விபத்து பொறுப்பேற்று நிவாரண மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டிய நேரம் இது. தற்போது வரை கோரமண்டல் ரயில்  விபத்தில் பலியான அனைத்து சடலங்களும் அகற்றப்பட்டுள்ளது.

ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடத்த இடத்தில்  புதன்கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் சேவையை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தால் இந்தியா முழுவதும் செல்ல உள்ள 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 45 மாற்று ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை வரட்டும் ஆனால் சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த சம்பவம் நடந்தது எனத் தெளிவுபடுத்தியுள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

த விபத்துக்கு சிக்னலில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம் என கூறப்படுகிறது. இச்சம்பவம்குறித்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பபட்டு உள்ளது