undefined

அரசு மருத்துவமனை கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் காயம்!

 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் காயம் அடைந்தார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 35 ஆண்டு பழமையான ஒரு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வயிறு மற்றும் குடல் சிகிச்சை பிரிவு இயங்கி வந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து கட்டிடத்தை பொதுப்பணித்துறை மூலம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கட்டிடத்தின் வராண்டா பகுதி மேற்கூரை சுமார் 12 அடி அளவுக்கு நேற்று திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் அந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த கட்டிட தொழிலாளி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க