undefined

காசா போர் துவங்கி ஓராண்டு நிறைவு... வெற்றி உறுதி என்கிறார் இஸ்ரேல் பிரதமர்!

 

காசா போர் துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் 40,000 இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதில் 1,205 பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் அப்பாவிகள். 

லெபனானில் இருந்து 12,400ம், சிரியாவில் இருந்து 60, ஏமனில் இருந்து 180, ஈரானில் இருந்து 400 ராக்கெட்கள் இஸ்ரேலுக்குள் ஏவப்பட்டு உள்ளது. இதற்கு ஈரான் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவையும் தாக்குதல் நடத்தி கொன்றது.

அஞ்சலி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், இஸ்ரேலில் டெல் அவிவ், டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் அதில் ஈடுபட்டவர்களுக்கும் ஹமாஸ் அமைப்பு தலைவர் பாராட்டு தெரிவித்து உள்ளார். இந்த தாக்குதல் இஸ்ரேல் மீதான மாயபிம்பத்தை தகர்த்து எறிந்தது எனக் கூறியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் தாக்குதலுக்கு பின், கள நிலவரத்தை இஸ்ரேல் ராணுவம் முற்றிலும் மாற்றி அமைத்து உள்ளது. இந்த போரில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!