சபரிமலை நடை திறப்பு.. கார்த்திகை வாசனை தரிசிக்க அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்!
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை 5 மணிக்கு மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் வைத்து, இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலையை வருகை தருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக தேவசம்போர்டு வாரியம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றார்கள். இன்று நவம்பர் 17ம் தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. நடப்பாண்டின் மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெறும். மகர விளக்கு பூஜை டிசம்பர் 30ம் தேதி நடக்கிறது.
2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை; மாசி மாத பூஜை பிப்ரவரி 12-17; பங்குனி மாத பூஜை மார்ச் 14-19 நடைபெறும். தினமும் 90,000 பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் முன்பதிவில் 70,000 பேர், ஸ்பாட் புக்கிங்கில் 20,000 பேர் தரிசனம் செய்யலாம். முன்பதிவு நவம்பர் 1ம் தேதியிலிருந்து தொடங்கியுள்ளது.
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் முன்னேற்பாடுகளை கவனத்தில் கொண்டு, ஒழுங்கான தரிசனம் மற்றும் பாதுகாப்பான யாத்திரை மேற்கொள்ளுமாறு தேவசம்போர்டு வாரியம் கேட்டுக்கொள்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க