எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிர்ப்பு... இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

 

தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (SIR) நடவடிக்கை உண்மையான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது என திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இதற்கு எதிராக நாளை தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திமுக மாவட்ட செயலாளர்களான அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: இந்தியத் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் SIR செயல்முறையை திணிக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கிராமப்புற மக்களும் விவசாயிகளும் Enumer­ation படிவங்களைச் சரியாக நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படும் ஆபத்து உள்ளது.

இந்த செயல்முறையை ஏற்க முடியாது என்பதை அனைத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளும் ஏற்கனவே தெரிவித்துள்ளன. மழை, அரசு பணியாளர்களின் அவசர பணிப்பணி என்ற சூழ்நிலையில் இத்தகைய சீராய்வு நடைபெறுவது தகுந்ததல்ல. நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய செயல்முறையில் ஏற்கனவே வாக்காளர் நீக்கம் அச்சம் உறுதியாகியுள்ளது.

எனவே, SIR நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுக்கப்படுவதாகவும், அதை ஏற்காத ஆணையம் பாஜக அரசின் அரசியல் நோக்கத்துக்காக செயல்படுகிறது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக கூட்டணி சார்பில் நாளை நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!