நாளை இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழையால், பல்வேறு கிராமங்கள், முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான, வட மாநிலங்களில் பருவமழையின் தாக்கமானது பாதிப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், தற்போது ஜார்க்கண்டிலும் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்ட்டின் கும்லா, சிம்டேகா மற்றும் மேற்கு சிங்பம் மாவட்டங்களுக்கு, நாளை செப்டம்பர் 4ம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கர்ஹ்வா, பலாமு, லடேஹர், லோஹர்டகா, குந்தி, சராய்கேலா கார்சவான் மற்றும் கிழக்கு சிங்பம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!