தமிழகத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

 

தமிழ்நாட்டில் இன்று முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரையிலான 3 தினங்களுக்கு மிக  கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 3, 4, 5 ஆகிய 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

12 செமீ முதல் 20 செமீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் 3, 4, 5 ஆகிய 3 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் 6, 7, 8 ஆகிய 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

கிராமங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி. சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழையால் இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று ஆகஸ்ட் 3ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு தகவல் அளித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?