undefined

அடுத்த 2 நாட்களுக்கு  தமிழகத்துக்கு ஆரஞ்சு அலெர்ட்!  

 

தமிழகத்தில் வானிலை தீவிரமாக மாறும் நிலையில், இன்று (15.11.2025) முதல் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் இலங்கை அருகே நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழியக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வாய்ப்பும் உள்ளது.

நாளை (16.11.2025) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மற்றும் புதுவையில் கனமழை வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (17.11.2025) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விழுப்புரத்தில் கன முதல் மிக கனமழை ஏற்படும் என மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு தொடர்கிறது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை அணுங்கும் நிலையில், குறைந்தபட்ச வெப்பநிலை 25–26° செல்சியஸாக இருக்கும். மீனவர்கள் 15 முதல் 17 தேதிவரை தமிழக கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கிமீ வரை சூறாவளிக்காற்று வீசக் கூடியதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!