undefined

பாகிஸ்தான்: பழங்குடியின கிராமங்களிடையே வெடித்த வன்முறை.. 42 பேர் பரிதாப பலி!

 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அப்பர் சுர்ரம் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கு இடையே நில உரிமை தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வருகிறது. இது முடிந்ததும் 5 நாட்களுக்கு முன் கடும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். புசேரா கிராமத்தில் ஏற்பட்ட கலவரம் மற்ற கிராமங்களுக்கும் பரவியது. ஆங்காங்கே பதுங்கு குழிகளை அமைத்து எதிரிகளைத் தாக்கினார்கள்.

இதனால் அந்த பகுதிகள் போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த வன்முறை தாக்குதல்களில் இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதையடுத்து, அரசு சார்பில் இரு தரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக நடந்த மோதல்களுக்குப் பிறகு நேற்று சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று இரவு இருதரப்பினரும் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூடு தொடர்கிறது. இதனால் பழங்குடியின கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. இன்று காலை நிலவரப்படி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 170 பேர் காயமடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!