undefined

இந்திய பெண்ணை கரம் பிடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.. இன்ஸ்டாவில் அறிவிப்பு!

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ராசா ஹாசன் நாட்டுக்காக ஒரு ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டும், டி20யில் 10 விக்கெட்டும் எடுத்துள்ளார். 2012-ம் ஆண்டு பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தார்.அதன் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு, ராசா ஹாசன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். தற்போது 32 வயதான ராசா ஹாசன் 32 வயது இந்திய பெண்ணான பூஜா போமனை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து முடிந்துள்ளது. பூஜா போமன் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றாலும், அவரும் அமெரிக்காவில் வசிக்கிறார்.

இதுகுறித்து ராசா ஹாசன் அறிவித்துள்ளதாவது, "எனது நிச்சயதார்த்தத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்வின் காதலாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டதற்கு அவர் ஆம் என்று கூறினார். எதிர்கால வாழ்க்கையின் சாகசங்களை ஒன்றாக எதிர்கொள்ள ஆவலாக உள்ளேன். எங்கள் திருமணம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி நடக்க இருப்பதாக" என்று அவர் கூறினார்.

ராசா ஹாசன் திருமணம் செய்து கொள்ளும் இந்தியப் பெண் பூஜா போமன் ஒரு இந்து. அவர் தனது வருங்கால கணவர் ராசா ஹாசனின் இஸ்லாமிய மதத்தில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் இந்துவில் இருந்து முஸ்லீமாக மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!