கார் ஏற்றி பகையாளியை கொலை செய்த ஊராட்சி மன்ற தலைவர்!
திருப்பூர் மங்கலம் கருகம்பாளையத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி . இவர் நேற்று முன்தினம் கருகம்பாளையத்தில் பள்ளி அருகே ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில், ஸ்கூட்டருக்கு பின்னால் கார் ஒன்று வந்த நிலையில் அந்த காரை தி.மு.க.வை சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி ஓட்டி வந்தார்.
அப்போது திடீரென ஸ்கூட்டர் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார்.
தகவலின் பேரில்விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பழனிச்சாமியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் விரைந்து வந்து பலியான பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த கருகம்பாளையம் பழனிச்சாமியின் குடும்பத்தினர் அளித்த புகார் அளித்தனர். “சாமளாபுரம் பேரூராட்சி கருகம்பாளையம் பகுதியில் தார்சாலை அமைப்பது குறித்து இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக பேரூராட்சி தலைவர் விநாயகாபழனிச்சாமி தனது காரை ஸ்கூட்டர் ஓட்டிவந்த கருகம்பாளையம் பழனிச்சாமி மீது ஏற்றி கொலை செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!