பெற்றோர்களே உஷார்...  பீரோ சரிந்து 6 வயது சிறுமி பலி... விளையாடிக் கொண்டிருந்த போது பெரும் சோகம்!  

 


 
அரியானா மாநிலம் பஹார் காலனி பகுதியில் வசித்து வரும் சிறுமி தீபான்ஷி . இவர்  தனது வீட்டில் உள்ள பீரோவின் கதவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பீரோ சிறுமியின் மீது சரிந்து விழுந்து விட்டதாக தெரிகிறது இந்த விபத்தில்  சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டது. 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு  பதறிப்போன தீபான்ஷியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

 எனினும் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து   காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பீரோ விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் இருப்பவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?