காதலர்களை கண்டித்த பாஜக எம்.எல்.ஏ.. வீடியோ வைரல்!

 

சத்தீஸ்கர் மாநிலத்தின் எம்எல்ஏவாக இருப்பவர் ரிகேஷ் சென். பாஜகவைச் சேர்ந்த இவர் துர்க் மாவட்டத்தில் உள்ள வைஷாலி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது தொகுதியில் உள்ள பூங்காவில் காதலர்களை சந்தித்து விசாரணை நடத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ள அவர், "இந்த வீடியோ மூலம் அனைவருக்கும் பூங்காக்கள் குழந்தைகள் விளையாட ஏற்றது என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆபாச செயல்களில் ஈடுபடக்கூடாது. அவர்களின் நடத்தை மற்றவர்களை பாதிக்கலாம். இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். கல்வி மற்றும்  பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றுங்கள். என்று குறிப்பிட்டிருந்தார்" .இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் அங்கீகாரம் இல்லாத தங்கும் விடுதிகள் மீது ரிகேஷ் சென் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதனால், பூங்காக்களுக்கு காதலர்கள் அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!