1000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து... 15 பேர் பலி!
இலங்கையில் கொழும்பு நகரத்தின் அருகில் வெல்லவாயா பகுதியில் அமைந்துள்ள மலையில் நேற்று இரவு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சுமார் 1,000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில், 15 பேர் சம்பவயிடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 5 குழந்தைகள் உட்பட 16 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்துவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்படும் நிலையில் பெரும்பாலான மலைகளின் மீது செல்லும் வாகனங்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!