2026 தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர் - அண்ணாமலை பேச்சு!

 
 

கோவை மேட்டுப்பாளையம் கோ-ஆப்ரேடிவ் காலனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற சிறப்பு பொது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், “ தமிழகத்தில் 25,000 ஊராட்சிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வீடுகள் தோறும் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதனை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பொறுத்த வரை அரசினுடைய அடக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது.

இதையெல்லாம் தமிழக மக்கள் படிப்படியாக எதிர்த்து தமிழக அரசுக்கு பாடம் புகட்ட தயாராகிவிட்டனர். இதற்காக 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஆர்வமுடன் மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. 9 நாட்களில், அங்கு போலீசாரின் அடக்குமுறை இல்லை” என்று பேசினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?