ஒகேனக்கலில் 17 நாட்களுக்கு பின் அனுமதி... பரிசல் ஓட்டிகளின் திடீர் ஸ்டிரைக் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கடந்த 17 நாட்களாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில், நேற்று காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்ததையடுத்து பரிசல் இயக்க கலெக்டர் சதீஸ் அனுமதி வழங்கினார். நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளும் அதிகளவில் ஒகேனக்கலில் குவிந்திருந்தனர்.
சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்த நிலையில், திடீரென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
'ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 8 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து இருந்தால், மாமரத்துகடவு பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்கவும், 30 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரித்தால், ஊட்டமலை பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்கவும், 50 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரித்தால், மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளான கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்கவும் அனுமதியளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்,' என்றனர்.
இது குறித்து பரிசல் ஓட்டிகளிடம் அதிகாரிகள் பேசியும் சமாதானம் ஏற்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!