மீண்டும் மோடியுடன் பயணத்தை தொடங்கிய பி.கே மிஸ்ரா, அஜித் தோவல்!
மோடி 3 வது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில் அவருடன் 71 பேர் கொண்ட மத்திய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பிரதமரின் முதன்மை செயலாளராக தற்போது மீண்டும் பி.கே மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சரகம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பிகே மிஸ்ரா முதல்வரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரை மீண்டும் நியமிக்க அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவருடைய பதவிக்காலம் பிரதமரின் பதவிக்காலத்திற்கு இணையாக இருக்கலாம் . அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்ற அஜித் தோவல் மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!