undefined

 சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் யோகாசனம் செய்த பிரதமர் மோடி!

 
 

இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடந்த 10-வது சர்வதேச யோகா தினக்கொண்டாட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கி, யோகாசன பயிற்சியில் ஈடுபட்டார்.காஷ்மீரின் தால் ஏரி கரையில் உள்ள ஷேர் - இ - காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (எஸ்கேஐசிசி) இன்று காலை 6.30-க்கு தொடங்க இருந்த நிகழ்வு, நகரில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்டது. பின்னர் யோகா நிகழ்வு உள்அரங்குக்கு மாற்றப்பட்டது.மழை நின்ற பின்னர் தால் ஏரியில் எடுத்த புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தாண்டு நிகழ்வு இளம் மனங்கள் மற்றும் உடல்களில் யோகாவின் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதை வலியுறுத்துகிறது. உலக அளவில் ஆரோக்கியம் மற்றும் நலன்களை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சியில் ஆயிரக்கணக்கானோரை ஒன்றிணைப்பதை இந்தக் கொண்டாட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.


கடந்த பத்து ஆண்டுகளில் யோகாவின் பரவலாக்கம் அதன் கருத்தை மாற்றியுள்ளது. இன்று உலகம் ஒரு புதிய யோகா பொருளாதாரத்தை முன்னோக்குகிறது. இந்தியாவில், ரிஷிகேஷிலிருந்து, காசி முதல் கேரளா வரை யோகா சுற்றுலா மூலம் ஒரு புதிய இணைப்பு உண்டாகியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் இந்தியாவின் உண்மையான யோகாவை அறிந்து கொள்ள விரும்புகிறனர்.


யோகா ஒவ்வொருவரது சுயத்துக்கும் சமூகத்துக்குமானது. 10-வது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் இந்தவேளையில், யோகாவை தங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ளுமாறு அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன். யோகா மற்றும சதானா பூமிக்கு வருவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்ரீநகரில் நாம் யோகாவில் இருந்து பெறும் சக்தியை உணர முடியும்.
யோகா வலிமையையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இந்தாண்டு ஸ்ரீநகரில் நடக்கும் யோகா தினத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.இந்தாண்டு இந்தியாவில் 101 வயது யோகா ஆசிரியைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால் யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். இன்று, பிரபலமான பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் யோகா குறித்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன என்று பிரதமர் பேசினார்

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!