நவம்பர் 19ம் தேதி கோவை வருகிறார் பிரதமர் மோடி!

 

கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக, தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தென்மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைக்கும் இந்த மாநாடு, வரும் நவம்பர் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் 19ம் தேதி பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளிடம் உரையாற்றுகிறார். அதையடுத்து, 50க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் தனிப்பட்ட கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர். மண்ணின் மலட்டுத்தன்மை, ரசாயன நச்சுத்தன்மை, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் போன்ற தலைப்புகளில் ஆலோசனைகள் நடைபெறும்.

பி.ஆர். பாண்டியன் மேலும் தெரிவித்ததாவது: “தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் தற்போது 10 சதவீதம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. கடைகளில் ஆர்கானிக் என்ற பெயரில் ரசாயனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு இல்லை. இந்த மாநாட்டின் மூலம் அதைப் பெரிதும் வலியுறுத்துகிறோம்.

நச்சுத்தன்மை நிறைந்த ரசாயன விவசாயம் காரணமாக நோயில்லா விவசாயக் குடும்பங்கள் அரிதாகியுள்ளன. இதைத் தடுக்க இயற்கை விவசாயம் மட்டுமே தீர்வாகும். இதற்காக அரசு மற்றும் விவசாயிகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்” என்றார். பிரதமர் மோடி கலந்து கொள்வதால், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு தேசிய அளவில் பெரிதும் உயரும் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!