undefined

நாளை தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர்  மோடி... ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்!

 

ஜி20 தலைவர்களின் 20வது உச்சி மாநாடு வரும் நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

மோடி, மாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் பங்கேற்று உரையாற்ற திட்டமிட்டுள்ளார். இந்தியாவின் நிலைப்பாடுகளையும், உலக முன்னுரிமை கேள்விகளையும் அவர் முன்வைப்பார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜி20 நிகழ்ச்சிக்குப் பின்பு பல இருதரப்பு சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலவற்றில் உலக தலைவர்கள் பங்கேற்கும் போதிலும், மோடி பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா தலைவர்களுடனான கூட்டத்திலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதன் பின்னணியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் “அங்கீகாரமற்ற நடவடிக்கைகள்” காரணமாக அவர் தேவையான ஆதரவை வழங்கமாட்டார் என்று ட்ரம்ப் புறக்கணித்ததற்கான காரணமாக கூறப்பட்டுள்ளது. 

இந்த பயணம், இந்தியாவின் சர்வதேச அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும், உலகளாவிய அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதி செய்யும் முயற்சியாமாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!